நடிகர் ஆர்யா மிலிந் ராவ் இயக்க இருக்கும் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தன. அந்த சமயத்தில் OTT தளங்களில் தான் பெரும்பாலான படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில், நடிகர் ஆர்யா வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘அவள்’ பட இயக்குனர் மிலிந் ராவ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த வெப்தொடரில் நடிகை ஆர்யாவுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.