Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற நபர்… சட்டென எட்டி பார்த்த சிறுத்தை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து  சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்   .

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த நபர்  அங்கும் இங்கும் பார்த்துள்ளார். அப்போது தான் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் அவர் அந்த சிறுத்தை நடந்து சென்ற காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத் தளங்களில் வெளிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் கூறும்போது குற்றாலம் மலைப் பகுதிகளில் சிறுத்தை உள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுத்தைகள் மலைக்கு மேலே உள்ள வனப்பகுதியில் மட்டுமே நடமாடும் என்றும் அவ்வப்போது மெயின் அருவியின் மேல் பகுதியில் இருந்து கீழே எட்டிப்பார்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வனத்தில் உள்ள விலங்குகளுக்கு நாம் எந்தவித  இடையூறும் செய்யாமல் இருந்தால் விலங்குகளும்  நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |