தமிழ் சினிமாவில் வெளியான அருவி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அருவி. இப்படம் சர்வதேச அளவில் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அதன்பின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் அருவி படத்தில் தங்கல் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த பாத்திமா சானா ஷேக் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தனது படக்குழுவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.