நடிகர் அருண் விஜய் அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக விளங்கியவர் அருண் விஜய். பல படங்களை வைத்திருக்கும் இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகனின் புகைப்படத்தை மட்டும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் இவ்வளவு அழகான மகள் அருண் விஜய்க்கு இருக்கிறாரா என்று ஆச்சரியம் அடைந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் அவரது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.