Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்…!!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக  அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.

Image result for Arun Kumar Sinha is the Chairman of the Cauvery Water Management Commission

இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து காலியாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் தற்போது அருண்குமார் சின்கா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் காவிரி ஆணைய கூட்டத்தை அருண்குமார் சின்கா  நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |