திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்த மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார்.
இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் உருவச்சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அன்பழகனிடம் வழங்கி, கலைஞரின் நினைவு நாள் வருகிறது.அதையொட்டி கலைஞருக்கான உருவ சிலை முரசொலி அலுவலகத்தில் திறக்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு கட்சியின் மூத்த தலைவரான நீங்கள் வருகை தந்தால் நன்றாக இருக்குமென அன்பழகனிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.