Categories
அரசியல்

கலைஞர் பண்ணல….. நாங்களும் பண்ணமாட்டோம்….. மனச்சாட்சியுடன் பேசுங்க…. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பேச்சு…!!

கருணாநிதி முதல்வராக இருந்த போது  தஞ்சை பெரிய கோவிலில் ஏன் தமிழில் குடமுழுக்கு நடத்த வில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை கீழவாசலில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தஞ்சை குடமுழுக்கு குறித்து பேசினார். அதில்,  1997இல் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வில்லை.

இன்றைக்கு மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழில்  நடத்த வலியுறுத்துகிறார்கள். அன்றைக்கு உங்கள் தலைவர் ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் கேள்வி கேட்பது மனிதனுடைய உரிமை, ஆனால் அதை நீங்கள் சிந்தித்து கேட்கவேண்டும் என்றும்  தமிழ் மொழியில் உங்கள் தலைவர் கும்பாபிஷேகம் ஏன் நடத்தவில்லை என்ற கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேட்ட பின் கேள்வி எழுப்பிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |