Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.  

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதன்படி சுமார் 40 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்படுவதால் அங்கே கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. எனவே இதனை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மதுபான கடைகளில் மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க  குடையோடு வரவேண்டும்.

குடை இல்லாமல் வருவோருக்கு பாட்டில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் குடை விற்பனை கலை கட்டுகிறதாம். குடை விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை சமூக இடைவெளி (மது ) தான் முக்கியம் என்று அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு குடிமகன்கள் வாங்கி செல்கிறார்களாம்.

Categories

Tech |