Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம் ….!!

சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை ட்விட்டரில் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர், “சட்டம் என்ன சொல்கிறது? முதலில் ஆதாரத்தைக் கண்டுபிடியுங்கள், பின்னர் கைதுசெய்யுங்கள் என்கிறது. ஆனால் எவ்வித ஆதாரமுமின்றி சதாப் ஜாபர், எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை முதலில் கைதுசெய்துவிட்டு, அதன்பின்னர் ஆதாரத்தை தேடியுள்ளனர். இது அவமானகரமானது. ஆதாரங்களைச் சரிபார்க்காமல் அவர்களுக்கு நீதிமன்றம் எந்த வகையில் காவல் வழங்கியது எனத் தெரியவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |