களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ப்ரதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.