Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இளம் பெண் செய்யும் செயலா இது….? வீட்டில் வைத்து மது விற்பனை…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து கோவிந்தபுத்தூர் பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்தப் பெண் வீட்டின் பின்புறத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். அதன்பின்  மதுபாட்டில்களை பறிமுதல்  செய்த போலீசார் பூங்கொடி மீது வழக்கு பதிந்து பின் கைது செய்தனர்.

Categories

Tech |