Categories
மாநில செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது – டிஜிபி எச்சரிக்கை …!!

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில், அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 1410 பேர் கைது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால்  கல்விச்சு வன்முறையில் ஈடுபட்டவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பாட்டில்களில் மண்ணெண்ணெய் நிரப்பி  பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டு, பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாநகரத்தில் இந்த சம்பவம் பெரும் பதட்டத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் கோவை மாநகரத்தில் மூவாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டிஜிபி உத்தரவின் பேரில் தாமரைக்கண்ணு நேரடியாக கோவை சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யார் பின்னணியிலிருந்து செயல்படுகிறார் ? எத்தனை பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் ? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 250 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுத்து வரக்கூடிய சூழல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது வரை 19 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சில அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தகநிலையங்கள் குறி வைத்து தாக்கும் நடத்தப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |