Categories
தேசிய செய்திகள்

உழைக்கும் எண்ணம் இல்லை…. ஆசையை தூண்டிய…. கோலி…. தமன்னாவை கைது செய்ய கோரி வழக்கு….!!

பிரபல கிரிக்கெட் வீரர் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வரும் ஒரு விஷயம் என்றால் அது ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவதுதான். ஆரம்பத்தில் அதிக பணத்தை சம்பாதிப்பது போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்து விட்டு, நாள் போகப்போக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் சுரண்டி எடுக்க கூடியதுதான் சூதாட்டம். அந்த சூதாட்டம் நடப்பு வாழ்க்கையிலிருந்து காலத்திற்கு ஏற்றார் போல் தற்போது ஆன்லைனுக்கு மாறியுள்ளது.  ஆன்லைனில் எங்கிருந்த படியும் மொபைல் மூலமாக ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை ஆட முடியும். இந்நிலையில் பணம் வைத்து விளையாடக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி எம்பிஎல் உள்ளிட்ட விளையாட்டுகளின் மூலம் இளைஞர்களுக்கு உழைக்கும் எண்ணம் இல்லாமல் தவறான பாதைக்கு வழி நடத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்கு காரணமாக இருந்த அதற்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி , நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு குறித்த விசாரணை வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |