கோவிலில் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்டநல்லூரில் பலவேசக்காரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று 4 குத்து விளக்குகளை திருடி சென்றனர். மேலும் அங்கு திருட வந்த மர்மநபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி மகன் பலவேசம் முத்து ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோவிலில் திருடியது முத்துவேல், மாரிமுத்து என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 4 குத்துவிளக்கு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.