இங்கிலாந்திலுள்ள ரயில்வே நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் வன்முறை தொடர்பான அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்னும் பகுதியில் விக்டோரியா ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் 17 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய நண்பரும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்துள்ளார்கள்.
இது குறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி வைத்திருந்த 17 வயது வாலிபரை சுற்றிவளைத்துள்ளார்கள். இதனையடுத்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அது பலன்களை சுடுவதற்காக பயன்படுத்தப்படும் சாதாரண துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் அந்த 17 வயது இளைஞனையும் அவருடைய நண்பரையும் பொதுமக்களிடையே வன்முறை தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பொது இடத்தில் சுற்றித் திரிந்தார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளார்கள். மேலும் இது தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.