Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 7 திருட்டு வழக்கு… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தவரின் மேல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மீது ஏற்கனவே 7 மணல் திருட்டு வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ளவர்களிடம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து மணல் திருடி இயற்கை வளங்களை அழித்து நீர்வள ஆதார அமைப்புகளுக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |