Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் செல்வது தெரியவந்தது.

அப்போது காஞ்சிபுரத்தில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் லாரியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தர்மா என்பவரை பிடித்து பறக்கும் படையினர் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் குறித்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் தர்மா மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |