சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒத்தையால் கிராமத்தில் வசித்து வரும் கருப்பசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது கருப்பசாமியை மடக்கி பிடித்த சாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து பெரியகொல்லபட்டி பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவரையும் மது விற்பனையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல சாத்தூர் டவுன் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படந்தாலை பகுதியில் வசித்து வரும் குணசேகர் என்பவர் அண்ணாநகர் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பின் கைது செய்தனர்.