Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொடூரம் : 4 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்…. 32 வயது இளைஞன் கைது…!!

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அந்த சிறுமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 வயது சிறுமி என்றும் பாராமல், கொடூர செயலில் அந்த இளைஞன் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

Categories

Tech |