அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வுக்கு தயாராக வில்லை என அர்த்தம் ஆகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.