அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கும் முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி செய்துவிடலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அரியர் மாணவர்களில் பலர் முந்தைய தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற மாணவர்களுக்கு அவர்களது கல்லூரிகளில் அவர்கள் எழுதிய இன்டர்ணல், முந்தைய செமஸ்டரில் எழுதிய தேர்வுகளில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.