பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த நற்செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.