அமெரிக்காவில் எறும்பு கடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஜோயல் மார்பிள் என்ற முன்னாள் ராணுவ வீரர் தங்கியிருந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரை ஒருநாள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துள்ளது. காலையில் அவரை குளிக்க வைத்து வேறொரு அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.இரண்டு நாட்களுக்குப் பின் அவர் முன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார்.
அப்போது அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்ததால் அவர் இரண்டு நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். அரசு காப்பகத்தில் முன்னாள் ராணுவ வீரரை ஒழுங்காக கவனிக்காத அமெரிக்க அரசு மீது ஜோயல் மார்பிளின் மூன்று பிள்ளைகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவ்வழக்கில் தங்கள் மூவருக்கும் ஆளுக்கு 10 மில்லியன் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் முதியோர் இல்லத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த முதியோர் இல்லம் முதியோர்களை கவனித்துக்கொள்ள ஏற்றதாக இல்லை என்று கூறி மூடிவிட்டனர். அதன்பின் முதியோர் இல்லத்தில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அங்கு தங்கியிருந்த முதியோர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.