Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகன விபத்தில் உயிரிழந்த… ராணுவ அதிகாரி… ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரபாகரனின் உடல் டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சொந்த ஊரான கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Categories

Tech |