Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால் பிரிந்த மனைவி… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருள் நகரில் வசித்து வந்த ராணுவ வீரரான வாலகுரு மிசோரத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் காரைக்குடிக்கு விடுமுறை காரணமாக வந்துள்ளார். அப்போது அங்கு அவருடைய மனைவி கனிமொழிக்கும், வாலகுருவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வாலகுருவிடம் சமாதானம் பேசுவதற்காக கனிமொழியின் தந்தை அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வாலகுரு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கனிமொழியின் தந்தை காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |