Categories
Uncategorized உலக செய்திகள்

ராணுவத்தின் வெறிச்செயல்….ரத்த கொலைவெறித் தாக்குதல்…. பீதியில் போராட்டக்காரர்கள்

மியான்மரில் ராணுவத்தினர் ரத்த கொலைவெறி தாக்குதலை தொடங்கியுள்ளதால் போராட்டக்காரர்கள் பீதியில் உள்ளனர்.

மியான்மரில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியை  இராணுவத்தினர் சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல இடங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் ரத்தக் கொலைவெறி தாக்குதலில் களமிறங்கியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த பயங்கர ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் ராணுவம் தங்களது ரத்த கொலை வெறி தாக்குதலை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நெட்வொர்க பொறியாளர் ஒருவர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டக்காரர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து ஓடினர். அதில் தைரியமான ஐந்து பேர் மட்டும் இறந்த பொறியாளரின் உடலை தூக்கிச் சென்றனர். இவரைத் தவிர மேலும் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு தெருவில் வீசப்பட்டனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் கிரேட் வெடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன்பின் தாவேய்  என்ற கடற்கரை பகுதியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் மோட்டார் பைக்கில் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்தார். இந்த கொலைவெறி தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்து கிடக்கும் சடலங்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் குழுவினர் கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, “எங்களுக்கு சுடுமாறு உத்தரவு தரப்படவில்லை.

நாங்களாகத்தான் சுட்டுத் தள்ளுகிறோம். மேலும் சுடுவோம். இது எங்களின் விருப்பம் ஆகும். இதிலிருந்து நீங்கள் சாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் வீட்டுக்குள் சென்று விடுங்கள் என்று கூறியதை பத்திரிக்கையாளர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார். இதனை தனது முகநூல் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மியான்மரில் உள்ள நிலமைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Categories

Tech |