ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியுள்ளதாக Lloyds List Maritime Intelligence உறுதி செய்துள்ளது. இந்த கப்பலை கடத்தியது யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரான் படைகள் தான் அந்த கப்பலை கடத்தி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தங்கள் நாட்டிற்கு எதிரான போலி காரணம் தான் இது என்று கூறியுள்ளது. இதற்கிடையே 9 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே சென்ற MV Asphalt Princess டேங்கர் கப்பலை கடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்களில் ஒன்று ஈரான் படைகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரித்தானிய கடற்படை MV Asphalt Princess டேங்கர் கப்பலை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்று விட்டதாகவும் தற்போது பாதுகாப்பான நிலையில் அந்த கப்பல் உள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.