அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுக்கு தகுதி பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது .
இந்த தேசிய விளையாட்டு விருதானது, சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில், சிறந்து விளங்கக்கூடிய வீரர்,வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும் , சிறந்த வீரர்களை உருவாக்கியா பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுக்காக சிறந்த சேவை செய்பவர்களுக்கு தயான் சந்த் விருது ஆகிய தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு தகுதி பெற்ற வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியோர் அடுத்த மாதம் ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.
இதுபற்றி மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தற்போது கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகான பரிந்துரைகள் ஆன்லைன் மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் தனிப்பட்ட முறையிலும், சுய பரிந்துரை விண்ணப்பங்களும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து வழக்கம்போல தேசிய விளையாட்டு சம்மேளனங்களும், விருதிற்கு தகுந்த நபர்களை பரிந்துரை செய்யலாம், என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . தேசிய விளையாட்டு விருதுகளான கேல் ரத்னா விருதை பெறுபவர்களுக்கு ரூபாய் 25 லட்சமும், துரோணாச்சார்யா , அர்ஜுனா விருதை பெறுபவர்களுக்கு ரூபாய் 15 லட்சமும் மற்றும் தயான் சந்த் விருதை பெறுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.