Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது…!!

அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார்.

கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும்  மாணவர்களுக்கு தேர்ச்சி என்பதை ஏற்க முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என குறிப்பிட்டுள்ளார். அரியர் தேர்வு குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையின் போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |