அரியர் தேர்வுகளை இரத்து செய்ய முடியாது என்றும் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்று வருகின்ற பெருமை பெறுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞசர் ராம்குமார் வழக்கு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்தன. இந்த நிலையில் ராம்குமார் ஆதித்தன் மட்டும் தனியாக ஒரு புது வழக்கு தொடுத்திருக்கிறார். அதில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும், தேர்ச்சி முடிவுகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முதல் முறையாக நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, யுஜிசி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஏற்கனவே ஆரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்யக்கூடாது என்று பழைய வழக்கில் பதிலளித்து இருக்கின்றோம். அதே முடிவை தான் இந்த வழக்கிலும் எடுத்திருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.