அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய தேர்வு ரத்து செய்யப்பட்டதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது.