Categories
மாநில செய்திகள்

கோவையில் ‌”அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை”….. 50,000 பேருக்கு வேலை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிட்டாம்பாளையம் பகுதியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை சுமார் 316.04 ஏக்கர் பரப்பளவில், 585 தொழில் மனைகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை அமைப்பதற்காக 24 கோடியே 60 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 14 கோடி 60 லட்ச ரூபாய் பயனாளிகளின் பங்களிப்பாகவும், அரசின் பங்களிப்பு 10 கோடி ரூபாய் ஆகும் இருக்கும் நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற் பூங்காவாக கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை அமைய இருக்கிறது.

இதன் மூலம் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக 30000 பேருக்கும் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆட்சி மாறியதால் அதிமுக திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. மேலும் தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Categories

Tech |