Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறிகள் ஏதும் இல்லை…. ஆளுநர் நலமுடன் இருக்கிறார் – மருத்துவமனை அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

சென்னை கிண்டியில் இருக்கின்ற தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 38 பேருக்கு மேற்கொண்ட சோதனையில், மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிறது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நலமுடன் இருப்பதாகவும் 7 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று ஆளுநர், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வந்தார்.இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது அறிகுறிகள் இல்லாமல் நலமுடன் இருக்கின்ற ஆளுநரை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |