Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “ஆதரவு பெருகும்”.. போட்டிகள் விலகிச்செல்லும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மனதில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் இன்று கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். அதே போல மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது படும். ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.

உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விடுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை நீங்கள் இன்று துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும் கணவன் மனைவியைப் பொறுத்தவரையில் அன்பு நீடிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை.

ஏற்றத்தை அடையக்கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |