மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தாராளமான பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். வெளி வட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். மதிப்பு கூடும். இன்று எல்லாமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று தொழிலில் புதுமையான யுக்திகளை கையாண்டு மனம் மகிழ்வீர்கள். அதேபோல சொத்து தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கூடுதல் கவனத்துடன் எதையும் செய்யுங்கள். மற்றவர்களை அணுகும் போது நிதானமாக செயல்படுங்கள்.
இன்று விஐபிக்களின் சந்திப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். மிக முக்கியமாக இன்று நீங்கள் யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் .அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான வேலைக்கு செல்லும்போது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு தொடங்குங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய நமஸ் காரம் செய்து இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்