அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக பண வீக்கம் அதிகரித்திருக்கிறது. இது, 30 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இதே போன்ற நிலை நீடித்தால் இந்த வருடத்தில் அங்கு பணவீகம் 100% தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.