Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் உள்ளீர்களா?”…. வக்கீலிடம் கேள்வி எழுப்பிய … தலைமை நீதிபதி …!!

தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து என்பவர் மரியாதை மிகுந்த எந்த வார்த்தையையும் வழக்கறிஞர்கள் உபயோகிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

“லார்ட் ஷிப்” என மரியாதையாக அழைக்கப்படும் முறைக்கு மாற்றாக, Your honour என்று அழைத்த வழக்கறிஞரை, நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கிறீர்களா? என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே கேட்டுள்ளார். வழக்கறிஞர்கள் நீதிபதிகளை அழைப்பது பற்றி விதிகள் எதுவும் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்ததும், அதற்கு பதில் கொடுத்த தலைமை நீதிபதி போப்டே,  இந்திய நீதிமன்றங்களில் லார்ட் ஷிப் என அழைப்பதுதான் வழக்கமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து, மரியாதை நிமித்தமான எந்த வார்த்தையையும் வழக்கறிஞர்கள் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார். அந்த அமர்வில் போப்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட், பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியான எஸ்.முரளீதர் போன்றோரும் தங்களை லார்ட்ஷிப் என அழைக்கத் தேவையில்லை என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |