Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் புனித நீரில் நீராட செல்கிறார்களா…? இல்லனா கழிவு நீரில் நீராட செல்கிறார்களா….? கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் தேங்கியிருப்பதால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படைந்துள்ளது.

இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 52.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 7 வருடங்கள் ஆகியும் 50 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அது புனித நீரா? இல்லனா கழிவு நீரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தியா முழுவதும் இருந்து மக்கள் இந்த கழிவு நீரில் தான் நீராடுவதற்கு வருகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |