Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்:

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் மொத்த சேர்க்கை விகிதத்தை உயர்த்துவது ஆகும். இது 15-16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உலக தரமிக்க கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அமைச்சகத்தின் நிதி மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது.

கலா ​​உத்சவ்:

ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ”கலா ​​உத்சவ்”  என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகம் (MoE) நடத்தி வருகின்றது. இது நாட்டிலுள்ள பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வளர்த்து, அதன் மூலம் கல்வியில் கலைகளை மாணவர்களுக்கு ஊக்குவிக்கின்றது.

மேலும் இது மாணவர்களுக்கு கலை அனுபவங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இந்தியாவின் வளமான கலாச்சாரம்,  பாரம்பரியம், பன்முகத்தன்மை ஆகிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் உள்ள பள்ளி கல்வியில் மாணவ – மாணவிகள்  கலைத் திறமைகளை அடையாளம் காண வழிவகை செய்கின்றது.

தமிழகத்தில் கலா ​​உத்சவ்:

இந்த நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் கிரேயன்ஸ் என்டர்டைன்மென்ட் ”கலா உத்சவ் 2022” போட்டியை நடத்துகிறது. இதற்கு Daily hunt மற்றும் Josh ஆப்கள் இணைந்து ஸ்பான்சர் செய்கின்றன.  தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ”ப்ளூ மூன்” உணவகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணி முதல் 12.30 மணி வரை “நம்ம ஊரு -கலக்கல் சங்கமம் 2022” என பல நிகழ்வுகள்  நடைபெறுகிறது.

ரூ.25,000 பரிசு: 

இதற்காக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 25,000 ரூபாயும், பள்ளி மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாயும் பரிசு வழங்கப்படும். இதற்கான நுழைவு கட்டணமாக 300 ரூபாய் செலுத்தி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்கலாம்.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டி:

“கலா உத்சவ் -2022” – இல் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் தனி நடனம், பாடல், வரைதல் (சொந்த தலைப்பு), கவிதை எழுதுதல் (ஸ்பாட் தலைப்பு) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாராயணவலசு நந்தா நகர வளாகத்தில் வைத்து  இதற்கான பதிவு நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 25-ஆம் தேதி, மாலை 6மணி வரை நடைபெறுகின்றது. அவர்களுக்கான போட்டி  நவம்பர் 27 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது.

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி: 

“கலா உத்சவ் -2022” – இல் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் தனி நடனம், பாடல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குமரபாளையத்தில் உள்ள எக்செல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)-யில் இதற்கான பதிவு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 3 மாலை 6 மணி வரை பதிவு முடிவடைகிறது. இவர்களுக்கான போட்டி,  டிசம்பர் 4ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது.

மேலும் விவரம் மற்றும் பதிவு செய்ய:

9025496759 , 9500017574

www.crayonsentertainment.com

டெய்லி ஹண்ட் ஸ்பான்சரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரையும் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

Categories

Tech |