Categories
தேசிய செய்திகள்

”மத்தியஸ்த குழு தோல்வி”உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது…!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு தோல்வியடைந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  குழுவை அமைத்தது.

Image result for இப்ராகிம் கலிபுல்லா

மேலும் இந்த குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சமரசகுழு தனது   இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.பின்னர் ஆகஸ்டு 2-ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சமரச குழுவின் நிலை தகவல் அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதில் அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இயலவில்லை என்று மத்தியஸ்த குழு தெரிவித்தது.

Seithi Solai

மத்தியஸ்தகுழு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் காலக்கெடு முடிவடைவதற்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்று மத்தியஸ்த குழு தெரிவித்துள்ளது சமரச முயற்சியில் தோல்வி அடைந்ததை காட்டியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினந்தோறும்  நடைபெறுமென்று உச்சநீதிமன்றம்  தெரிவித்தது. அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

Categories

Tech |