Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலாக நடித்து அசத்தும் அரவிந்த்சாமி…. இணையத்தை கலக்கும் ரெண்டகம் டீசர்….!!!

அரவிந்த்சாமியின் ரெண்டகம் திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்து சுவாமி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தற்போது ரெண்டகம் எனும் படத்தில் நடித்து வருகிறார். ஃபெல்லினி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு  A.H.கசீஃப் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஆடுகளம் நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் அரவிந்த்சாமியின் மிரட்டலான நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://youtu.be/xJGWEckUZUQ

 

Categories

Tech |