Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு உத்தரவை மீறி செயல்படுது…. ரொம்ப சிரமமா இருக்கு…. தாசில்தாரிடம் கோரிக்கை மனு….!!

மதுபான கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனிடம், முன்னாள் எம்.பி.யும்., இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை செயல்பட்டு வருகின்றது.

எனவே நெடுஞ்சாலைகளில் அரசு மதுபானக்கடை திறக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மதுபான கடை செயல்பட்டு வருவதால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியள்ளனர். மேலும் இங்கு அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கடையை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |