தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபையில் சத்துணவு சமையல் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோருக்கு ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அரசு அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்பட்டியல் உயர்வை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து நிறைய கோரிக்கைகளில் வந்ததால் இந்த கோரிக்கைகளை அரசு ஏற்று ஜனவரி 1-ஆம் தேதி முதலாக விலை உயர்வு பெற்று அமலுக்கு கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஆண்டு ரூ.6,480 கோடி செலவிடப்படும். அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சத்துணவு உதவியாளர் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 29137 சமையலார்கள் மற்றும் 24,576 உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.