Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரசுத்துறைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு…!!

தமிழ்நாட்டில் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பணியமர்த்தப்பட்டு தமிழக  மக்கள் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலகிரி ஆய்வக தொழிற்சாலைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பணி வழங்காமல் அவரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஆறு பேருக்கு பணி வழங்கப்பட்டது தொடர்பாக சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தனி நீதிபதி சரவணனுக்கு பணி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பொதுமக்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக அரசு அதிகாரிகள் மாநில மொழிகளை அறிந்திருக்க வேண்டும் எனவும், ஆனால் இதில் தேவையற்ற அரசியல் நகர்வுகள் உள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழியிலேயே தேர்ச்சி பெறாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

மேலும் இப்படி கேள்வி எழுப்பினால் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம்  தலையிட இயலாது என கூட படுவதாகவும் தெரிவித்தனர். தமிழகத்தில் மின் வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தை சேர்ந்தோர் பணி அமர்த்தப்பட்டு தமிழக மக்கள் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக நீலகிரி ஆயுத தொழிற்சாலை பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

Categories

Tech |