Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 10-க்கும் மேற்பட்டோர்….. கோவை அருகே கோர விபத்து….!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்து சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்றது. அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது மோதியது.

இதனால் லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |