Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ரகளை… முதியவர் செய்த அட்டகாசம்… வைரலாகும் வீடியோ…!!!

அரசு பேருந்து மீது முதியவர் ஒருவர் ஏறி ரகளை செய்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கீழ கரும்புலியுத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வயது 60 இவர் கூலி தொழில் செய்துவருகிறார் . இரண்டு நாட்களுக்கு முன் ஆலங்குளம் செல்வதற்காக கரும்புலியுத்து  பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. எனவே காளிமுத்து அடுத்து வந்த டவுன் பஸ்ஸில் ஏறி ஆலங்குளம் சென்றார். திடீரென ஆலங்குளம் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் சென்று கொண்டிருந்த தென்காசி – நெல்லை பேருந்தை வழிமறித்து அந்த பேருந்தின் டிரைவர் இடம் காளிமுத்து ஏன் கீழ கரும்புள்ளி புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் என்று கேட்டார். கரோனா பாதிப்பிற்கு முன்னிருந்தே எங்கள் கிராமத்தில் பேருந்து நின்று செல்வதாகக் கூறி வாக்குவாதம் செய்தார். பேருந்தை எடுக்க விடாமல் காளிமுத்து டிரைவரிடம் பேசிக்கொண்டு ரகளை செய்தார். ஆத்திரம் அடைந்த டிரைவர் பேருந்தை இயக்க முயன்றார்.

அப்பொழுது காளிமுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியின் கைப்பிடியை பிடித்து கம்பியின் மீது ஏறி நின்றார். டிரைவர் பேருந்தை இயக்க முயன்ற போதும் காளிமுத்து இறங்கவில்லை. மேலும் பேருந்து 20 அடி தூரத்திற்கு சென்றும் காளிமுத்து இறங்காத நிலையில் கண்ட்ரைக்டர் இறங்கிவந்து காளிமுத்து கைபிடித்து கீழே இறக்கி விட்டார். பிறகு பேருந்தும் அந்த இடத்திலிருந்து சென்றது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கீழ கரும்புலியூத்து கிராமத்தின் வழியாக வேறு ஒரு தென்காசி – நெல்லை சென்ற பேருந்தின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை எறிந்தார் .அதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதனைப்பற்றி பேருந்தின் டிரைவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அப்புகாரின் பெயரில் விசாரித்தபோது அந்த கல்லை எறிந்தவர் காளிமுத்து என்று தெரியவந்தது பிறகு போலீசார் காளிமுத்துவை கைது செய்ததனர். பேருந்து நிற்காமல் போனதற்காக பேருந்தின் மீது கல்லெறிந்தும் வழிமறித்தும் காளிமுத்து செய்த ரகளை சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |