தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளில் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது பொது ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனுடன் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமான முறையில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் அதிக அளவு பணியிடங்களை நியமிக்கலாம்.
அது மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தவர் தமிழக அரசு பணிகளில் சேருவதை கட்டுப்படுத்த முடியும். மின்வாரியத்தில் அதிகளவு வெளிமாநிலத்தவர்கள் தான் தற்போது பணியில் சேர்ந்துள்ளனர் என விமர்சனங்கள் எழுந்தன. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்கினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ் மொழி தகுதி தேர்வானது 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இந்தத் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்ற பிறகு முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வு தாள் மதிப்பீடு செய்ய முடியும்.
அதனுடன் தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே தமிழ்நாடு அரசு பணிகளில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ்மொழி தெரிந்து இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்பட்டார்கள்.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் அரசு பணியில் சேர்வதற்கு இனி இதெல்லாம் கட்டாயம்.