அரசு மற்றும் பொதுப்பணித்துறைகளில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் அமீரக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த முக அடையாளம் சில முக்கியத் துறைகளில் வாங்கப்படும் அடையாள ஆவணத்திற்கு பதிலாக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது இந்தத் திட்டம் பொதுத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் அரசு துறைகள் மற்றும் அரசு ஏஜென்சிகளில் இந்த முக அடையாளத்தை பயன்படுத்துவதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அரசு துறைகளில் பண மாற்றம் மற்றும் ஆவண மாற்றங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கும் இந்த முக அடையாளம் பாடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதனை ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ் மென்பொருள் உடைய யூ.ஏ.இ. என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் அமீரக அடையாள அட்டையை பதிவு செய்து கொண்டால் அதில் உள்ள அனைத்து தகவல்களும் அந்த செயலில் உறுதி செய்யப்படும். அதன் பிறகு பயோமெட்ரிக் பேசியல் பிங்கர்பிரின்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக அடையாளத்தை பதிவு செய்யலாம்.
தற்போது பயன்படுத்தும் செல்போனில் கைரேகை வைப்பதுபோல் இதுவும் மிக சுலபமானது. ஒருமுறை நாம் முக அடையாளத்தை பதிவு செய்துவிட்டால் சேவைகளில் அடையாள ஆவணங்களுக்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தினால் மட்டுமே போதுமானதாக உள்ளது. தற்போது உள்ள சாதாரண அரசு சேவை மையங்களில் ஒரு ஆவணங்களை பெறுவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது .
ஆனால் இந்த முக அடையாளத்தை பயன்படுத்தும் ஆவணங்களுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் சிறந்த டிஜிட்டல் முறையில் ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள சேவையை 130 அரசு மற்றும் பொதுத்துறை 6 ஆயிரம் வகையான சேவைகளை பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.