தனியார் நிறுவன ஊழியர் நடிகை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் இது போன்ற படங்களில் நடித்தவர் தான் அன்ன ராஜன். இவர் கொச்சியில் புதிய சிம் வாங்குவதற்காக தனியார் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருடன் புதிய சிம் வாங்குவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பெரிய அளவில் தகராறாக மாறியது. இதனை அடுத்து அந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அன்ன ராஜன் அருகிலிருந்த காவல் நிலையத்தில் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.