கும்ப ராசி அன்பர்களே…!! இன்று உத்வேக மணமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பானதாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து, மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்துச் செல்ல கூடும். இதனால் மனதில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இன்று உறவினர் வகையில் உதவிகள் இருக்கும். வெளியூர் பயணங்களை கூட இன்று மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.